இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து விஷ்வ விந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : 10 பேர் கைது.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவடம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இந்து பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சரவண கார்த்திகேயன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.