பாபர் மசூதி இடிப்பு வழக்கை சிபிஐ மேல்முறையீடு செய்ய கோரி ஓசூரில் தமுமுகவினர் ஆர்பாட்டம்.
பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுருக்கின்ற கொடூரமான அநீதியை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் ஓசூர் இராம்நகர் அண்ணாசிலை அருகில் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன போராட்டம் மாவட்ட தலைவர் ஏஜாஸ்கான் தலைமையில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நவுஷாத் கண்டன உரையாற்றினார். தமுமுக ஊடகப் பிரிவு செயலாளர் அல்தாப் அஹமத்,தமுமுக மாவட்ட செயலாளர் (பொ) சலீம்,மமக மாவட்ட செயலாளர் கலீல் பாஷா,மாவட்ட பொருளாளர் ஜூபைர்,மாவட்ட துனை செயலாளர் பாஷா,மற்றும் அணி,ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளானோர் பங்கு கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்தி : mohammed younus

Leave your comments here...