ஸ்ரீவில்லிபுத்தூரில் 50 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவு நுண் உரக்குடில் அமைத்தல் கட்டிடம் திறப்பு.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.

இப்பகுதியில் மக்கள் பயன்படுத்தும் கழிவு பொருட்களிலிருந்து உரம் தயாரித்து அதை விவசாயிகளுக்கு கொடுத்து உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மடவார் வளாகம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி புதிய நுண் உரக்குடில் அமைத்தல் கட்டிடம் கட்டப்பட்டது.

இதை, பயன்பாட்டிற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.