கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அலுவலத்தை முற்றுகையிட்ட மாற்றுதிறனாளிகள் ..?

Scroll Down To Discover
Spread the love

மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலத்தை முற்றுகையிட்ட மாற்றுதிறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய அலுவகத்தை முற்றுகையிட்ட மாற்றுதிறனாளிகள் 2013 தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுதிறனாளிகளை நீதிமன்ற உத்தரவுபடி இணைக்க வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை கைவிடுதல், மாற்றுதிறனாளிகளுக்கு கல்விதகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், கொரோணா நிவாரணத்தை முழுமையாக முறையாக வழங்கிட வலியுறுத்தி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.