சரவண பொய்கையில் கொத்து கொத்தாக மீன்கள் இறப்பு : கோவில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து இளைஞர் முன்னணியினர்..!

Scroll Down To Discover
Spread the love

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்துபோனதையடுத்து கோவில் நிர்வாக அலுவலகத்தை இந்து இளைஞர் முன்னணியினர் முற்றுகை போராட்டம்

அறுபடைவீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் பல்லாயிரகணக்கான மீன்கள் செத்து மிதந்தன.இதனால் பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் மிகுந்த வேதனையும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்த கோரியும் இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் செல்ல குமார் தலைமையில் கோவில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த திருப்பரங்குன்றம். காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா பேச்சுவார்த்தை செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். பின்னர் இந்து இளைஞர் முன்னணி கட்சியினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.