பாஜக விவசாய அணி சார்பாக முப்பெரும் விழா : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை சோழவந்தானில் பாஜக விவசாய அணி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது

மதுரை புறநகர் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் பாஜக விவசாய பிரிவு சார்பாக முப்பெரும் விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

https://youtu.be/uMO6zoL4uvQ

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள், பண்டித தீனதயாள் உபாத்தியாயா, மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு முள்ளிப்பள்ளம், தென்கரை ஊராட்சி மற்றும் சோழவந்தான் பேரூராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உயர்ரக சேலை வேட்டிகள் மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

மாநில விவசாய பிரிவு செயலாளர் மணி முத்தையா தலைமை வகித்தார் ,மாவட்ட பொது செயலாளர் கோவிந்த மூர்த்தி மாவட்ட பொருளாளர் சந்திரபோஸ் விவசாய அணி துணை தலைவர் சிங்கப்பூர் பாலு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.