உலகில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு வாய்ந்த 100 பேரின் பட்டியலை ‘டைம் இதழ் வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யபடுகிறது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், கமலா ஹாரிஸ், ஜெர்மன் அதிபர் மெக்கெல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுந்தர் பிச்சை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி மட்டுமே.பிரதமர் மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பண மதிப்பிழப்பு, ஜம்மு, காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்தது, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளால் அவர் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துத்துவ மனப்பான்மையுடன் அவர் செயல்படுவதாக விமர்சித்துள்ளது. மேலும், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

இப்பட்டியலில் பிரதமர் மோடி தவிர, இந்தியாவிலிருந்து நடிகர் ஆயுஷ்மான் குரானா, டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 82 வயதான மூதாட்டி பில்கிஸ் ஒருவர். முதுமையிலும், அவர் போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுத்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. எய்ட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிரிட்டனில் எய்ட்ஸ் நோயாளியை குணமாக்க முக்கிய பங்காற்றிய டாக்டர் ரவீந்திர குப்தாவுக்கு இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது

														
														
														
Leave your comments here...