சோழவந்தானில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்புப் பணிகள் ஒத்திகை..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை சோழவந்தானில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்புப் பணிகள் ஒத்திகை நடைப்பெற்றது.

மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் உத்தரவின்பேரில் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்தின் சார்பாக வடகிழக்கு பருவ மழையின் போது பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் அவசரகால மீட்புப்பணிகள் பயிற்சிகள் ஆற்று நீரில் அடித்துச் செல்பவர்களை காப்பாற்றும் செய்முறைப் பயிற்சிகள் நடைப்பெற்றது.

வெள்ளத்தில் இழுத்துச் செல்பவர்களை மீட்கும் நடவடிக்கை சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த செயல் விளக்க பயிற்சி முகாம் சோழவந்தான் வைகையாற்றில் நடந்தது நிலைய அலுவலர் சீனிவாசன் நிலைய போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தார்கள்.