42 ஆண்டுகளுக்கு முன் தமிழக கோவிலில் திருடப்பட்ட ராமர் லட்சுமணர் சீதா வெண்கல சிலைகள் : லண்டனில் கண்டுபிடிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அவற்றில் தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பினர்.

அந்த படங்களில் இருப்பது மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து 1978ல் திருடப்பட்ட ராமர், லட்சுமணர் மற்றும்சீதா பிராட்டி வெண்கலசிலைகள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதி செய்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். தகவல் அறிந்து அந்த டீலர் ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளையும் லண்டன்அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். சிலைகளை தமிழகத்திற்கு எடுத்து வர இந்தியதொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.