10 ஆண்டுகளாகியும் மின் இணைப்பு இல்லாத சமுதாயகூடம்.!

Scroll Down To Discover
Spread the love

தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் அலிவலம் சமூக ஆர்வலர் அன்புமணி ரெத்தினம் தஞ்சை கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, பேராவூரணி ஊராட்வி ஒன்றியம் அலிவலம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயகூடம் உள்ளது. இதுநாள் வரை மின் இணைப்பு கொடுக்கப்படாமல்  மக்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.இந்த சமுதாயகூடம் மின் இணைப்பு இல்லாததால் பேரிடர் காலங்களில்மின் இணைப்பு இருந்தால் திருமணம் மற்றும் இதர நிகழ்வுகளை இங்கே நடத்தலாம்.முதியவர் ஓய்வுக்கு உதவும்.

மழை காலங்களில் கூரை வீட்டுவாசிகளுக்கு வாழ்விடமாக கருதபடும் இந்த சமுதாயகூடம் மின் இணைப்பு இன்றி இருப்பது இந்த நவீன காலத்திலும் வேதனைக்கு உரியதாக உள்ளது.இது குறித்து அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவெடிக்கையும் இல்லை.எனவே தாங்கள் இந்த சமுதாய கூடத்தை நேரில் பார்வையிட்டு மின் இணைப்பு இடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவ்மனுவில் கூறியுள்ளார்.