வேலை வெட்டி இல்லாத நபர்களுக்கு டீசர்ட் மாட்டி விட்டுட்டாங்க – ஏபி.முருகானந்தம் ட்வீட்

Scroll Down To Discover
Spread the love

சமூக வலைதளத்தில் ‘ஹிந்திதெரியாதுபோடா’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் வைரலானது. வெற்றிமாறனுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சிரீஸ் ஆகியோர் ‛நான் தமிழ் பேசும் இந்தியன்’, ‛ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டுகளை அணிந்து டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டனர். அதில் திருவள்ளுவர் படமும் இருந்தது. தொடர்ந்து, நடிகர் சாந்தனு, அவரது மனைவி கீர்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என இந்த பட்டியல் நீண்டது.
இதை சுட்டிக்காட்டி தி.மு.க., எம்.பி., கனிமொழி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் ‘ஹிந்தி_தெரியாது_போடா’ என்ற ஹேஷ்டேக் போட்டியாக ‛திமுக_வேணாம்_போடா’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. குறிப்பாக யுவனின் டீ-சர்ட்டில் இருந்த வள்ளுவரே, எழுத்தாணியை எடுத்து கோபமாக உன்னோட போதைக்கு நான் ஊறுகாயா ஆள விடுங்கடா சாமி. ‛திமுக_வேணாம்_போடா’ என கூறுவது போன்ற மீம்ஸ்கள் வெளியாகின. தொடர்ந்து திமுக.,வை எதிர்த்து இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் இதற்கு பதிலடியாக பாஜகவின் தேசிய இளைஞரணித் துணை தலைவராக இருக்கும் ஏ.பி முருகானந்தம் ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில்:- இன்று காலை பிரபல திரை நட்சத்திரம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன், அப்பொழுது அவர் சொன்னது..

எங்க துறையில, வேலை வெட்டி இல்லாத நபர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு டீசர்ட் மாட்டி விட்டுட்டாங்க..
‘அப்பாவி ஆடுகள் ’ என்றார் சிரித்தபடி..GoatGrinning face
#டீசர்ட்_ஆடுகள் என ட்வீட் செய்து உள்ளார்