நீர் ஆதார வாய்க்காலை காணவில்லை: விவசாயி ஆட்சியரிடம் புகார்..!!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் பூதகுடி ஊராட்சியில் விவசாய நிலத்துக்கு வரும் நீர் ஆதார காணவில்லையென, விவசாயி ஒருவர் ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார்.

மதுரை அருகே குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவர் பூதகுடி ஊராட்சியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறாராம்.இவருடைய வயலுக்கு வரும் நீர் ஆதார பாசனக் கால்வாயை, வீட்டு மனை போடுவதற்காக சிலர் அழித்துவிட்டார்களாம்.

இது தொடர்பாக விவசாயி கண்ணன் பொதுப்பணித்துறை பாசனப் பிரிவு பொறியாளரிடம் மனு அளித்தும், வாய்க்காலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையாம்.ஆகவே, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாசன வாய்க்காலை மீட்டுத் தரக்கோரி, திங்கள்கிழமை காலை மனு அளித்தார்.