பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யக் கூடாது – இந்திய கோரிக்கையை ஏற்றது ரஷ்யா

Scroll Down To Discover
Spread the love

எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், எஸ்.சி. ஓ., நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, ராணுவ அமைச்சர், ராஜ்நாத்சிங் தலைமையிலான குழு, ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.


ராஜ்நாத்சிங், ரஷ்ய ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் சோயிகுவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், இருவரும், இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் பற்றி விவாதித்தனர். பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ய கூடாது என, ரஷ்ய ராணுவ அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட ரஷ்ய அமைச்சர் சோயிகு, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை ரஷ்யா சப்ளை செய்யாது என, உறுதியளித்தார்.