அரசு ஊழியர்களை ஆக்கப்பூர்வமாக தயார்படுத்துவதே “மிஷன் கர்மயோகி” திட்டத்தின் நோக்கம் – பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் ‘கர்மயோகி’ திட்டமும் ஒன்று. இது அதிகாரப் பூர்வமாக, ‘சிவில் சர்வீசஸ் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்’ என்று அழைக்கப்படும்.

இத்திட்டம் மனிதவள நிர்வாகத்தை மாற்றியமை உருவாக்கப்பட்டுள்ளது. ‘விதிகள் அடிப்படையிலான’ நடைமுறைகளுக்கு பதிலாக ‘பணிகள் அடிப்படையிலான’ நடைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கம் என பணியாளர் மற்றும் பயிற்சி துறை கூறியுள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: நாட்டின் அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான மிஷன் கர்மயோகி, அரசாங்கத்தின் மனித வள மேலாண்மை நடைமுறைகளை “தீவிரமாக மேம்படுத்தும். இத்திட்டம் சிவில் சர்வண்ட்ஸ் தொடர்ச்சியான கற்றலுக்கு மாறுவதற்கு உதவும். வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு ஊழியர்களை இன்னும் ஆக்கப்பூர்வமானவர்களாகவும், புதுமையானவர்களாகவும் மாற்றுவதன் மூலம் எதிர்காலத்திற்காக அவர்களை தயார்படுத்துவதே மிஷன் கர்மயோகி திட்டத்தின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.