மீனாட்சியம்மன் கோயிலில் அதிகாலை முதலே சுவாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்..!

Scroll Down To Discover
Spread the love

இன்று முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கிழக்கு கோபுர அம்மன் சன்னதியில் இருந்து தெற்கு கோபுரம் வரை பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்

பக்தர்களுக்கு இடையே சமூக இடைவெளி யோடு வருவதற்காக வட்டம் இடப்பட்டிருக்கிறது. அதேபோன்று இன்று பௌர்ணமி தினம் என்பதாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் முதல் நாள் என்பதால் வழக்கத்தைவிட அதிகமான அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்