புல்வாமா தாக்குதல் வழக்கு – நீதிமன்றத்தில் 13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Scroll Down To Discover
Spread the love

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெட்போரா என்ற இடத்தில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தத் தாக்‍குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு, விசாரணை நடத்தி வருகிறது. மிக அதிக இராணுவ பாதுகாப்பு கொண்ட ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பல்வேறு கேள்விகள் இன்றளவும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து தாக்‍குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த அப்துல் ரஷீத் காசி என்ற கம்ரான் மற்றும் ஹிலால் அகமது ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஹிலால் அகமது தாக்‍குதலின்போது சுட்டுக்‍கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் காஷ்மீர் நீதிமன்றத்தில் 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, இன்று தேசிய புலனாய்வு அமைப்பு தாக்‍கல் செய்தது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர்கள் உட்பட பல பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.