திருநங்கைகளுக்கும் சொத்தில் உரிமை உண்டு : உத்தரபிரதேச அரசு சட்டம் திருத்தம்..!

Scroll Down To Discover
Spread the love

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு திருந்கைகளுக்கும் நிலத்தின் மீதானபங்கு வழங்குவது என முடிவு செய்தத. இதற்காக 2006 ம் ஆண்டு வருவாய் சட்டத்தில் மாற்றம் செய்வது என முடிவு செய்தது.

இதனையடுத்து மாநில சட்ட ஆணையத்தின் தலைவரான் நீதிபதி ஏ.என் மிட்டல் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இக்குழு கடந்த மார்ச் மாதம் தன்னுடைய அறிக்கையைசமர்ப்பித்தது. மேலும் அறிக்கையில் மூன்றாம் பாலினத்தவருக்கு நிலம் குறித்த சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என வலியுத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த சட்ட திருத்தத்தின் மூலம் மூன்றாம் பாலினத்தவர்கள் மூதாதையர்களின் சொத்தை பெறுவதோடு மட்டுமல்லாது சமூக விரோத்ததிலிருந்து பாதுகாப்பதுடன் சமூகத்தில் அவர்களுக்கு சம உரிமைகளும் வழங்கும் என கூறினார் . இது குறித்த மசோதா மாநில சட்டபேரவையில் நாளை இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.