மணிப்பூரில், 13 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சாலைப் பாதுகாப்புத் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

Scroll Down To Discover
Spread the love

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மணிப்பூரில், 13 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு இம்மாதம் 17-ம் தேதியன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சாலைப்பாதுகாப்புத் திட்டம் ஒன்றையும் அவர் துவக்கி வைக்கிறார்.

மெய்நிகர் முறையில், நடைபெறும் இந்த விழாவுக்கு மணிப்பூர் மாநில முதல்வர் என் பைரன் சிங் தலைமை வகிக்கிறார். இதில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய , மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

ரூ.3,000 கோடி செலவில் 316 கிமீ நீளத்திற்கு, இத்திட்டங்கள் வாயிலாக சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் மணிப்பூர் மாநிலத்திற்கு சிறந்த போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படுவதுடன் பொருளாதார வளர்ச்சியும் உயரும்.