புதுக்கோட்டையில் 74வதுசுதந்திர தினம் : ஆட்சியர் உமாமகேஸ்வரி தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையினை ஏற்பு.!

Scroll Down To Discover
Spread the love

புதுக்கோட்டை ஆயுதப்படைமைதானத்தில் எளிமையாக நடந்த 74வது சுந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தேசிய கொடியினை ஏற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நடந்த நிகழ்வில் கொரோனா தடுப்புபணிகளில் களப்பணியாற்றிவரும் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்,தூய்மைப்பணியாளர்கள்,அரசு ஊழியர்கள் என
457 பேர்களுக்கு ஆட்சியர் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

சுதந்திரப்போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் விதமாக நிஜாம் காலணியில் வசிக்கும் தியாகி நாகப்பன் இல்லத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அவருக்கு கதராடை அணிவித்து சிறப்பு
செய்தார். நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர்
சரவணன்,வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், வட்டாச்சியர் முருகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.