கிராமங்கள் தோறும் இணைய வசதிகள் செய்த பின்னரே கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க வேண்டும் – இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

Scroll Down To Discover
Spread the love

கிராமங்கள் தோறும் இணைய வசதிகள் செய்த பின்னரே கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தினார்

தமிழகத்தில் உள்ள கல்லூரியில் புதிய மாணவர்கள் சேருவதற்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும், கல்லூரி மாணவர்கள் ஆன் லைன் வகுப்பில் பங்கேற்ற செய்வதில் சிக்கல் உள்ளது, அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி செய்ய பின்னர் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க வேண்டும், பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்கள் 5 மணி நேர ஆன் லைன் வகுப்பில் மாணவர்கள் பங்கேற்பு செய்வதில் சிக்கல் உள்ளதால் ஆகவே தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் பின்னர் கோரிக்கையை வலியுறுத்திய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள் .