மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஆவணி மூல உற்சவ விழா ரத்து.!

Scroll Down To Discover
Spread the love

கடந்த ஏப்ரல் மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ரத்தானதும், அதன்தொடர்ச்சியாக பல பெரிய கோவில்களில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் கோவிலின் உள்ளேயே மிக எளிமையாக நடத்தப்பட்டது.

இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஆவணி மூல உற்சவ விழாவானது இந்த ஆண்டு கொரோனவால் ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் க. செல்லத்துரை அறிவித்துள்ளார்.இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மூல உற்சவம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஊரடங்கு காரணமாக அக. 15.ம் தேதி முதல் செப். 1.ம் தேதி வரை நடைபெறும் விழா ரத்து செய்யப்பட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேகமானது பக்தர்கள் இன்றி நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.