மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
https://youtu.be/yQE-evZo63M
பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்கின்றது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்கள் நொறுங்கும் காட்சிகள் வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளன.துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், குண்டுவெடிப்பை அடுத்து நகரத்தில் ஒரு கரும் புகை வெளியேறியதாகவும் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உலகம்
August 5, 2020

Leave your comments here...