ஒரே நாளில் ரூ. 9,703 கோடி சொத்து சேர்த்த அமேசான் நிறுவனர் ..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்காவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் தொடர்ந்து பல்வேறு கட்டத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுத் தொற்றின் அளவை கட்டுப்படுத்தி வர முயற்சி செய்யப்பட்டாலும் தினமும் கொரோனாவால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனாவுக்கு அஞ்சி மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் தற்போது அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் அமேசானுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.ஆன்லைன் விற்பனையில் முன்னணி வகித்து வரும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் சொத்து ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் (ரூ.9,703 கோடி) உயர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தாண்டின் துவக்கத்தில் 74 பில்லியன் டாலராக இருந்த பெசோசின் சொத்து மதிப்பு தற்போது 189 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 73 சதவீதம் எனவும், கடந்த 2012-ம் ஆண்டிற்கு பின்னர் தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக சொத்து சேர்த்துள்ளது இது தான் எனவும் புளும்பெர்க் இதழ் தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.