ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களின் பாதுகாப்பு தரம் குறித்து கருத்து கேட்கும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்…!

Scroll Down To Discover

ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் வாகனங்களின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான தர நிர்ணயத்தை , மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள், 1989-இல் சேர்க்கும் வகையில் திருத்தத்துக்கான வரைவு அறிவிக்கையை ஜிஎஸ் ஆர் 436 (இ) , மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்றைய தேதியில் வெளியிட்டுள்ளது.

அவ்வப்போது திருத்தத்துக்கு உட்படுத்தப்படும், ஏஐஎஸ் 157; 2020 விதிக்கு ஏற்ப ,அழுத்தப்பட்ட வாயு ஹைட்ரஜன் எரிபொருள் செல் மூலம் இயங்கும் எம், என் பிரிவு மோட்டார் வாகனங்களை , இணையான பிஐஎஸ் விதிகளுக்கு ஏற்ப இந்தியத் தர நிர்ணயச் சட்டம் ,2016 (11/2016)_இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் செல் வாகனங்களுக்கான ஹைட்ரஜன் எரிபொருள் விதிகளுக்கு ஏற்ப இணையான ஐஎஸ்ஓ 14687 விதிகளுக்கு ஏற்ப இந்தியத் தர நிர்ணயச் சட்டம் ,2016 (11/2016)_இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேசத் திருத்தம் குறித்து, பொது மக்கள் உள்பட இது சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவினரின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அமைச்சகம் வரவேற்றுள்ளது. ஆலோசனைகளையும், கருத்துக்களையும், இணைச் செயலாளர் (எம்விஎல்), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், டிரான்ஸ்போர்ட் பவன், நாடாளுமன்ற தெரு, புதுதில்லி-110001( மின்னஞ்சல்-jspb-morth@gov.in) என்ற முகவரிக்கு 2020 ஆகஸ்ட் 9 –ஆம் தேதி வரை அனுப்பலாம்.