ஏழைகள் படும் சிரமத்திற்கு நான் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடி இன்று காலை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. நான் எடுத்த முடிவால் என்மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழி இல்லை. விதிகளை மீறி வீடுகளை விட்டு வெளியே வரும் சிலரால் கொரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியாது.


ஏழைகள் படும் சிரமத்திற்கு நான் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். உடல் நலமே அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். கீழ்படியாவிட்டால் அனைவரும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ஊரடங்கை மீற வேண்டாம். ஊரடங்கை மீற வேண்டாம்.வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகள் உள்பட பலரும் சமூகவலைதளம் மூலம் என்னுடன் பகிர்ந்து வருகின்றனர். மக்கள் இசை,தோட்டம், ஓவியம் வரைதல் என நல்லமுறையில் பொழுதை கழித்து வருவதாக அறிந்தேன். இது போல் அனைவரும் நல்ல முறையில் பொழுதை கழியுங்கள். சமூக விலகல் நமக்கு முக்கியம், மக்கள் நிற்பதில் இடைவெளியை பின்பற்ற வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சிலர் வெளியே வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள். சட்டத்தை, உத்தரவுகளை மீறுவது பலருக்கு ஆபத்தை விளைவிக்கும்.மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கம். மக்களை தனிமைப்படுத்துவதே, கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி.இவ்வாறு மோடி பேசினார்