ரிசர்வ் வங்கி மூலம் இந்திய வங்கிகளை உலக தரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 116-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
Smt @nsitharaman lights the ceremonial lamp at the 116th Foundation Day Celebrations of City Union Bank in Chennai. pic.twitter.com/bgcd57fBK7
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) November 23, 2019
அப்போது அவர் பேசியதாவது: வங்கி என்ற பெயரே மக்களை அச்சுறுத்த தொடங்கி விட்டது. எங்கேயோ ஒரு சிறிய கூட்டுறவு வங்கி செய்யும் மோசடியால் மக்களுக்கு வங்கிகள் மீது நம்பிக்கை குறைய தொடங்கியுள்ளது. ஏதோ ஓர் இடத்தில் யாரோ ஒருவர் செய்யும் தவறு மொத்த வங்கிகள் மீதும் சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கினால் அது அவர்களுக்கும் நாட்டுக்கும் கெடுதலாக முடியும்.எனவே வங்கிகளை திறமையாக கையாள வேண்டும் என தெரிவித்தார்.
Leave your comments here...