புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் கொடூரமாக கொன்றது அம்பலம் : அமெரிக்க புலனாய்வு இதழில் பரபரப்பு தகவல்

Scroll Down To Discover

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில், அந்த நாட்டு ராணுவத்தினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது.

இது குறித்து செய்தி மற்றும் புகைப்படங்களை சேகரிக்க ஆப்கன் தேசிய பாதுகாப்பு படையினருடன், இந்தியாவைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் சென்றார். இவர் புகைப்பட செய்தியாளர்களுக்கு வழங்கப்படும், மிக உயர்ந்த, ‘புலிட்சர்’ விருது பெற்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் ஸ்பின் போல்டக் பகுதிக்கு சித்திக் சென்றார். அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சித்திக் காயம் அடைந்தார்.சிகிச்சைக்காக அருகில் இருந்த மசூதியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள், பத்திரிகையாளர் என தெரிந்தே சித்திக்கை கொன்றனர்.

இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சித்திக் உடலில், 12 குண்டுகள் இருந்தன. குண்டு காயங்களை தவிர, அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னும், தலிபான்களின் வெறி அடங்கவில்லை. அ

வரது உடலை ஒரு வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.அவரது உடலில் ஒரு வாகனத்தை பல முறை ஏற்றி முகத்தைச் சிதைத்துள்ளனர். அவரது முகம் மற்றும் மார்பில் டயர்களின் தடங்கள் பதிந்திருந்தன. இவற்றை அவரது பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.