ராஜபாளையம் அருகே எ.முத்துலிங்காபுரத்தில் உள்ள திருநங்கைகள் ஊரடங்கால் பணி எதுவும் இல்லாமல் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்படுவதாக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளதை பார்த்து ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரங்கநாதன் உடனடியாக களத்தில் இறங்கி மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத் தலைவர் ராமராஜ் தொடர்புகொண்டு திருநங்கைகளின் கஷ்ட நிலையை எடுத்துக் கூறி அவர்களுக்கு உதவுமாறு கூறுகிறார்.
உடனடியாக மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் சுமார் 25  ஆயிரம் மதிப்புள்ள 15 நாட்களுக்கு தேவையான அரிசி மளிகை சாமான்கள் காய்கறிகள் சோப்பு டூத் பேஸ்ட் வாளி குடம் போன்ற பொருட்களை 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு வருவாய் வட்டாட்சியர் ரங்கநாதன் உடன் ராமராஜ் நேரில் சென்று வழங்கினார். உதவியைப் பெற்றுக் கொண்ட திருநங்கைகள் வருவாய் வட்டாட்சியர் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் மற்றும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நண்பர்களை மனதார வாழ்த்தினர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...