தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக சுகாதார துறை

Scroll Down To Discover
Spread the love

தமிழ்கத்தில் கொரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியில் ஆம்புலன்ஸுகள் முக்கிய பங்கு வகுக்கின்றன. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் அதிகரித்து வரும் நோயாளிகளை கூட்டி வருவதற்கான ஆம்புலன்ஸுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,

– சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 1500, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 25 நிர்ணயம்.
– ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 2000, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 50 நிர்ணயம்.
– வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 4000, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 100 நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.