உள்நாட்டு தயாரிப்பு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்காக இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

இந்தியா

பிரதமரின் ‘தற்சார்பு இந்தியா’ லட்சியத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்திக்கு மேலும் ஊக்கமளிப்பதற்கும், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (எஸ் ஐ டி எம்) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய ராணுவம் 2021 ஜனவரி 21 அன்று கையெழுத்திட்டது.

இந்திய தொழில் கூட்டமைப்புடன் (சி ஐ ஐ) 25 ஆண்டு கால ராணுவ-தொழில் கூட்டை குறிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உதிரி பாகங்களின் உள்நாட்டு உற்பத்தி மூலம் 1995-ஆம் ஆண்டில் தொடங்கிய ராணுவ-தொழில் கூட்டு, முக்கிய ராணுவ தளங்கள் மற்றும் அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வரை முன்னேறியிருக்கிறது.

தொழில்களுடன் திறன் வளர்த்தல் மற்றும் ஒற்றை தொடர்பு முறை ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக, ராணுவ துணை தளபதியின் (திறன் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை) தலைமையின் கீழ், வருவாய் மற்றும் முதலீடு ஆகிய இரண்டு வழிகளையும் இணைத்து இந்திய ராணுவம் தன்னை மறுசீரமைத்துக் கொண்டுள்ளது.

தொழில்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதற்கும், ராணுவ தளவாட உற்பத்தியாளர்களை பயனருடன் இணைப்பதற்கும் ராணுவ வடிவமைப்பு அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை வழங்குபவர், தளவாட உற்பத்தியாளர் மற்றும் பயனர் ஆகியோர் இதன் மூலம் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றனர்.

Leave your comments here...