மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பண்ட பாத்திரங்கள் மற்றும் கோவில் மணிகளை திருடிய பலே திருடன் போலீசார் கைது செய்து ரூ.3 1/2 லட்சம் பெறுமானமுள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருமங்கலம் பகுதி பேரையூர் அருகேயுள்ள முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கள்ள ராமன் (வயது 62). இவர் திருமங்கலம், வாடிப்பட்டி மற்றும் விருதுநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து பாத்திரங்கள், காப்பர் வயர், வீட்டு உபயோகப் பாத்திரங்கள் போன்ற பொருட்களை திருடிச் சென்றுள்ளார். இவர்மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த மூன்று மாதங்களில் திருமங்கலம் பகுதியில் உள்ள கோவிலில் உள்ள மணிகளையும் பூட்டிக் கிடக்கும் பெட்டிக் கடையில் உள்ள கேஸ் சிலிண்டர்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதாக போலீசாரிடம் புகார்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதையடுத்து டிஎஸ்பி வினோதினி உத்தரவின் பேரில் திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் அவர்களிடம் சிக்கி கள்ள ராமன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து கள்ள ராமனிடம் ரூ.3 இலட்சம் பெறுமானமுள்ள பொருட்கள் மற்றும் 2 1/2 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Leave your comments here...