பிறப்பு முதல் இறப்பு வரை நடைமுறையில் உள்ள லஞ்சத்தை மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? – கமல்ஹாசன்

Scroll Down To Discover
Spread the love

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் கமல் கூறியதாவது: எங்கள் ஆட்சியின்போது அனைவரின் வீட்டிலும் இணைய வசதியுடன் கணினி இருக்கும். அதற்கான முதலீட்டை அரசு கொடுக்கும். இணைய வசதி இருப்பதால் அரசுக்கும், மக்களுக்கும் தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும். நேர்மை தான் மக்கள் நீதி மையத்தின் சாதனை.

தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை தனித்தனியாக லஞ்சம் பெறுவது தொடர்கிறது. இது லஞ்சப்பட்டியல் தான். அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.எந்ததெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் பெறப்படுகிறது என்ற பட்டியலை கமல்ஹாசன் இன்று டிவிட்டரில் வெளியிட்டார்.

அதில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன் என கூறியுள்ளார்.