வாகனங்களில் சாதி பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் பொறித்தால் தண்டனை – உத்தர பிரதேச போக்குவரத்துத் துறை

Scroll Down To Discover
Spread the love

உத்தர பிரதேசத்தில் சமீப ஆண்டுகளாக யாதவ், ஜாட், குர்ஜார், பண்டிட் என்றெல்லாம் சாதிப் பெயரை பெருமையாக வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றனர். எந்த கட்சி அதிகாரத்தில் உள்ளதோ அதற்கு ஏற்ப இந்த ஜாதிகளின் பெயர் பயன்படுத்தப்படும். பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது ‘ஜாதவ்’ ஸ்டிக்கர்களைக் கொண்ட வாகனங்கள் அதிகமாகத் தெரிந்தன.

சமாஜ்வாடி கட்சி ஆட்சியின் போது, வாகனங்களில் ‘யாதவ்’ என எழுதுவது ஒரு அடையாளமாக இருந்தது. தற்போது யோகி ஆதித்யநாத் ஆட்சியில், சத்திரியா, தாக்கூர் அல்லது ராஜ்புத் போன்ற பெயர்கள் பொதுவாக காணப்படுவதாக கூறுகின்றனர்.

இது குறித்து மஹா.,வைச் சேர்ந்த ஹர்ஷல் பிரபு என்ற ஆசிரியர், பதிவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இது பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. அவர்கள் உ.பி., மாநில போக்குவரத்துத் துறைக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து கூடுதல் போக்குவரத்து ஆணையர் முகேஷ் சந்திரா அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், ஜாதிப் பெயர் கொண்ட வாகனங்களை கண்டதும் பறிமுதல் செய்யும் படி கூறியுள்ளார்.