ஆசிய போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு – 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம்

விளையாட்டு

ஆசிய போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு – 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம்

ஆசிய போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு – 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம்

ஆசிய கோப்பைக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாட 3 தமிழ்நாடு வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய மகளிர் கால்பந்து அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சவுமியா, இந்துமதி, சந்தியா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் 23ம் தேதி துவங்கி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள 22 பேர் கொண்ட இந்திய மகளிர் கால்பந்து அணியை இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளார் தாமஸ் டென்னர்பி வெளியிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள்: ஸ்ரேயா ஹூடா, சௌமியா நாராயணசாமி, பந்தோய் சானு, அஷ்தலதா தேவி, ஸ்வீடி தேவி, ரிது ராணி, டால்மியா சிபீர், ஆஸ்டம் ஒரான், சஞ்சு, ரஞ்சனா சானு, சங்கீதா பாஸ்ஃபோர், பிரியண்கா தேவி, இந்துமதி கதிரேசன், அஞ்சு தமங், சௌமியா குகுலோத், தங்மேய் கிரேஸ், பியாரி சாசா, ஜோதி, ரேனு, பாலா தேவி, மனிஷா மற்றும் சந்தியா ரங்கநாதன்.

இந்திய மகளிர் கால்பந்து அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சவுமியா, இந்துமதி, சந்தியா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Leave your comments here...