பாகிஸ்தான் தலைநகரில் முதல் கிருஷ்ணர் கோயில் – தடை விதிக்கக்கோரிய மனுக்களை,அந்நாட்டு நீதிமன்றம், தள்ளுபடி செய்தது..!

உலகம்

பாகிஸ்தான் தலைநகரில் முதல் கிருஷ்ணர் கோயில் – தடை விதிக்கக்கோரிய மனுக்களை,அந்நாட்டு நீதிமன்றம், தள்ளுபடி செய்தது..!

பாகிஸ்தான் தலைநகரில் முதல் கிருஷ்ணர் கோயில் – தடை விதிக்கக்கோரிய மனுக்களை,அந்நாட்டு நீதிமன்றம், தள்ளுபடி செய்தது..!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடியில் கிருஷ்ணர் கோயில் கட்டப்படுகிறது. இஸ்லாமாபாத்தில் அமையும் முதல் இந்து கோயில் என்ற பெருமையை இது பெறுகிறது. எச்-9 என்ற பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி மனையில் கோயில் கட்டப்படுகிறது. மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற செயலர் லால் சந்த் மால்ஹி கடந்த மாதம் கோயில் கட்டுமானப் பணி தொடங்க அடிக்கல் நட்டு பூமி பூஜை நடத்தினார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘கடந்த 1947-ம் ஆண்டுக்கு முன் இஸ்லாமாபாத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான இந்து கோயில்கள் இருந்தன. கோயிலுக்குச் சென்று வழிபட ஆளில்லாமல் போய் காலப் போக்கில் அவை கைவிடப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளில் இஸ்லாமாபாத்தில் இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்கள் வழிபட கோயில் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இக்கோவில் கட்ட பிரதமர் இம்ரான் கானின் கூட்டணி கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -குவைட் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் இஸ்லாமாபாதில், கோவில் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறக் கோரியும், பாகிஸ்தான்., நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று முன்தினம், தள்ளுபடி செய்தது.

Leave your comments here...