அயோத்தி ராமர் கோவிலில் இதுவரை 1½ பக்தரகள் கோடி தரிசனம்..!

ஆன்மிகம்

அயோத்தி ராமர் கோவிலில் இதுவரை 1½ பக்தரகள் கோடி தரிசனம்..!

அயோத்தி ராமர் கோவிலில் இதுவரை 1½ பக்தரகள்  கோடி தரிசனம்..!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுசெயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:-அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்முதல் இதுவரை 1½ கோடி பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ராமபிரானை தரிசித்துள்ளனர். கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கோவில் கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல் தளத்தில் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.கோவிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டி முடிக்கப்படும். கோவில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...