இராணுவத்தினருக்கு புதிய உத்தரவு ; 89 ஆப்புகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும்..!

இந்தியா

இராணுவத்தினருக்கு புதிய உத்தரவு ; 89 ஆப்புகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும்..!

இராணுவத்தினருக்கு  புதிய உத்தரவு ; 89  ஆப்புகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும்..!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி, திடீரென லடாக் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிலையில் 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய ராணுவம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய ராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், ஜூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவத்தினர், மற்றும் ஆயுதப்படையினர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் ஜூலை 15ம் தேதியிலிருந்து நீக்கிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...