தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்..!

அரசியல்

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்..!

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்..!

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹசீனா சையத் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார் என்று பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் மயிலாடுதுறை தொகுதியில் மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த ஆர்.சுதா போட்டியிட்டார். சுதா தேர்தலில் போட்டியிட்டதையடுத்து தற்போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave your comments here...