கொரோனா தடுப்பு பணியிலும் கிளுகிளுப்பு – கல்லூரி மாணவியிடம் ஆபாச பேச்சு : சஸ்பென்ட செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்..!

தமிழகம்

கொரோனா தடுப்பு பணியிலும் கிளுகிளுப்பு – கல்லூரி மாணவியிடம் ஆபாச பேச்சு : சஸ்பென்ட செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்..!

கொரோனா தடுப்பு பணியிலும் கிளுகிளுப்பு – கல்லூரி மாணவியிடம் ஆபாச பேச்சு : சஸ்பென்ட செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்..!

சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தலைநகரமான சென்னையில் கடந்த சில வாரங்களாக பாதிப்பு வேகமாக அதிகரிக தொடங்கியது. கொரோனா பாதிப்புகள் தொடங்கிய காலத்திலேயே தன்னார்வலர்களும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இதனால், வீடுகள்தோறும் கணக்கு எடுக்கும் பணிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தன்னார்வலர்கள் போல் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருபவர் கமலக்கண்ணன். அவர் அந்த மாநகராட்சி பகுதிகளில் பெண் தன்னார்வலர்கள் சில நபர்களை நியமித்து வேலை வாங்கி வந்துள்ளார்.

அதில் குறிப்பிட்ட ஒரு பெண்ணிடம் கமலக்கண்ணன் ஆபாசமாக பேசிய ஆடியோவானது சமூகவலைத்தளங்களில் வெளியானது. அவர் அந்த மாணவிக்கு செல்போனில் கிளுகிளுப்பாக பேசி தனது காதலை வெளிப்படுத்திய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணம் ஆன அந்த என்ஜினீயரின் தொல்லை தாங்காமல் குறிப்பிட்ட அந்த மாணவி இதுகுறித்து சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் முறையிட்டுள்ளார்.துணை கமிஷனர் ஜெயலட்சுமி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஐகோர்ட்டு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு இந்த ஆடியோவை ஆதாரமாக அளித்து புகாரானது அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் சென்னை உதவி பொறியாளர் கமலக்கண்ணனை சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் மீது துறைரீதியான நடவடிக்கையும், தொடர் விசாரணையும் நடைபெறும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...