தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

Scroll Down To Discover
Spread the love

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தால், இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள், திறந்த வெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர்.

இந்நிலையில் ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மகாத்மா காந்தியின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினர்.


மக்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும், உலகிலேயே மிகப்பெரிய இயக்கமான தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றிகரமான பயணம் குறித்து இனி வரும் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்த மையங்கள் செயல்படும். இந்த மையங்களில் தூய்மை பற்றிய தகவல்கள், விழிப்புணர்வு, கல்வி, இதர தொடர்புடைய அம்சங்கள் குறித்து டிஜிட்டல் முறையிலான தகவல்களும், இதர வகையிலான தகவல்களும் இடம் பெறும். கலந்துரையாடும் வகையில், முக்கிய செய்திகளும், வெற்றிக் கட்டுரைகளும், சிறந்த நடைமுறைகளும் உலக அளவிலான தரங்களும் பற்றிய முழுமையான கற்றல் முறை மூலம் பல்வேறு செயல்பாடுகளும், முறைகளும் கொண்ட கல்வி அனுபவமாக இம்மையம் செயல்படும்.


இந்த மையத்திற்கு அருகே திறந்த வெளி அரங்கில் வைக்கப்பட்டுள்ள காட்சிப் படங்களில் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கி தூய்மைக்கான போராட்டம் வரையிலான, இந்தியாவின் பயணத்தில் பல நிகழ்ச்சிகள் குறித்து விளக்கப்பட்டிருக்கும் தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றிக்கான அடிப்படை அம்சங்கள் பற்றி, இந்த மையத்தின் சுவர்களில் சுவர் ஓவியங்களும், கலைச் சிற்பங்களும் அழகுற எடுத்துக் கூறும்.இந்தியாவில் கிராமப்புற சுகாதாரத்தில், தூய்மை இந்தியா இயக்கம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திறந்த வெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர்.


உலகம் முழுவதிலும் இருந்து இதற்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது உலகின் மற்ற நாடுகள் பின்பற்றும் அளவிற்கு இந்தியா முன்னோடியாக உள்ளது தூய்மை இந்தியா இயக்கம் தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. திறந்த வெளியை கழிப்பறையாக உபயோகிக்காத இந்திய கிராமங்கள் (ஓடிஎஃப்) என்ற தற்போதைய நிலையிலிருந்து, திறந்தவெளியை கழிப்பறையாக ஒருபோதும் பயன்படுத்தாத கிராமங்கள் (ஓடிஎஃப் ப்ளஸ்) என்ற நிலைக்கு எடுத்துச்செல்வதும், திடக்கழிவு நீர் கழிவு மேலாண்மையை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.