கேரள விமான விபத்து: விமான நிலையம் பாதுகாப்பற்றது – முன்பே விடப்பட்ட எச்சரிக்கை..?

Scroll Down To Discover
Spread the love

கோழிக்கோடு விமான விபத்து நடந்த கரிப்பூர் விமானநிலையம் பாதுகாப்பாக இல்லை என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் போயிங் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாயினர்.

இந்த விபத்து நேர்ந்தது பற்றி, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசக குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மங்களூர் விமான விபத்து நடந்தபின்னர் நான் விடுத்த எச்சரிக்கை கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது.இந்த விமான நிலைய ஓடுதளம் சரிவு பகுதியை கொண்டுள்து. ஓடுதளத்தின் முடிவு பகுதியில் போதிய இடவசதி இல்லை. ஓடுதள முடிவில் 240 மீட்டர் அளவுக்கு காலியிடம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் 90 மீட்டர் அளவுக்கே இடம் உள்ளது.


இதுதவிர, ஓடுதளத்தின் இரு பகுதிகளிலும் 75 மீட்டர் அளவுக்கே காலியிடம் விடப்பட்டு உள்ளது. ஆனால் 100 மீட்டர் அளவுக்கு கட்டாயம் காலியிட வசதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார். மழைக்காலத்தில் இதுபோன்ற ஓடுதளங்களில் விமானங்களை இயக்குவதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், ஓடுதள முடிவில் பாதுகாப்பு பகுதிக்காக 240 மீட்டர் அளவுக்கு காலியாக விடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். விமான இயக்கங்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு ஓடுதள நீளம் ஆனது குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.