யுபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் யுபிஎஸ்சி தலைவராகப் பொருளாதார பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

யுபிஎஸ்சி தலைவராக இருந்த அரவிந்த் சக்சேனாவின் பதவிக் காலம் வெள்ளிக்கிழமை முடிவடைவதை அடுத்து பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் யுபிஎஸ்சியின் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் யுபிஎஸ்சி தலைவராக டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி பதவியேற்றுக்கொண்டார்.


சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் பொது சேவை ஆணையங்களின் தலைவராக இருந்த ஜோஷி, மே 2015 இல் யுபிஎஸ்சியில் உறுப்பினராக சேர்ந்தார்.தற்போது தலைவராக பதவியேற்ற ஜோஷியின் பதவிக்காலம் மே 12, 2021 நிறைவடையும். இவர் தலைவராக நியமிக்கப்பட்டதால், யுபிஎஸ்சியில் ஒரு உறுப்பினர் இடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.