தமிழகத்தைச் சேர்ந்தவர் பீலா ராஜேஷ்; ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழகத்தில் கொரோனா பரவ துவங்கிய போது, சுகாதாரத்துறை செயலராக இருந்தார். பின், வணிக வரித்துறை செயலராக மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார்கள் எழுப்பப்பட்டு, மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளது. பீலா ராஜேஷ் தனது வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, பீலா ராஜேஷ் மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அவர் மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்துக்கு மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

														
														
														
Leave your comments here...