சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்- நடிகர் சூர்யா ட்வீட்

Scroll Down To Discover
Spread the love

மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவிற்கு சூழலியல் செயற்பாட்டாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான நடிகர் கார்த்தி தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்தப் பிரச்சனை தொடர்பாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 அறிவிக்கை குறித்து நடிகர் சூர்யா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அந்த ட்வீட்டில். “பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/Suriya_offl/status/1288344830653816832?s=20