விஜய் ஆண்டனியின் பிறந்தநாளில் பிச்சைக்காரன் 2′ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Scroll Down To Discover
Spread the love

2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமனுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர்.

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிச்சைக்காரர்களின் வாழ்வியலை கண்முன் நிறுத்தி கலங்கச்செய்யும் ‘பிச்சைக்காரன்’ என்ற படத்திலும் நடித்து அவர்கள் மீது மதிப்பையும் ஏற்படுத்தினார். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு முன்னணி நாயகன் அந்தஸ்து கிடைத்தது. இந்த கொரோனா ஊரடங்கில் ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதி முடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.


விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளது. இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.