பாதாம் பருப்பில் துபாய் ஆட்சியாளர் இந்திய பிரதமர் மோடியின் ஓவியம் : அசத்திய இந்தியா ஓவியர் – குவியும் பாராட்டுகள்..!

Scroll Down To Discover
Spread the love

துபாய் ஆட்சியாளர், அமீரக துணை அதிபர் மற்றும் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் 71-வது பிறந்த நாள் நேற்று ஆகும். இதனையொட்டி இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் அமன் சிங் குலாதி பாதாம் பருப்பில் அவரது உருவத்தை வரைந்துள்ளார்.

பாதாம் பருப்பில் அமன் சிங் குலாதி அவரது உருவத்தை வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது ஓவியத்தில் துபாய் ஆட்சியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கை குலுக்குவது போன்று உள்ளது.


துபாய் ஆட்சியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, அவர்கள் கை குலுக்கியதை அமன் சிங் குலாதி வரைந்துள்ளார். மேலும் இந்த ஓவியத்தில் இந்திய தேசிய கொடிகள் பின்னணியில் இருப்பது போன்றும் வரையப்பட்டுள்ளது.அமன் சிங் குலாதி உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் இந்திய ஓவியரின் இந்த பாதாம் ஓவியத்தை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிக்கு பலரும் பிறந்த வாழ்த்துக்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.