போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது ..!

Scroll Down To Discover
Spread the love

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அருகே, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபேயை பிடிக்கச் சென்ற போலீசார் மீது, ரவுடி கும்பல், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், ஒரு டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உட்பட, எட்டு போலீசார் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் ஏழு போலீசார் படுகாயம் அடைந்தனர். தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர். துபேயின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, என்கவுன்டர் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சில போலீசாருக்கு, ரவுடி கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. துபேயை பிடிப்பதற்காக போலீசார் வரும் தகவலை, சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சிலர், முன் கூட்டியே ரவுடி கும்பலுக்கு கசியவிட்டதும் தெரிய வந்தது.இதன் அடிப்படையில், அந்த ஸ்டேஷனின் பொறுப்பு அதிகாரி, சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஒரு எஸ்.ஐ., உட்பட, மேலும் மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை ரூ.5 லட்சமாக உத்தரபிரதேச அரசு உயர்த்தி இருந்தது.

இந்த நிலையில், 40 தனிப்படை போலீசார் டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தனி தனிப் பிரிவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் டில்லி சொகுசு ஓட்டலில் அவன் தங்கியிருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்நிலையில் இன்று காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார். அவரை உ.பி.,க்கு அழைத்து வருகின்றனர்