தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்தது – தமிழக அரசு

Scroll Down To Discover
Spread the love

சாத்தான்குளம் தந்தை-மகன் போலீசார் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, இதில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள், கொரோனா தன்னார்வல பணியாளர்கள் மற்றும் பென்னிக்ஸின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த சம்பவத்தில், ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும், ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பினர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி அதிசய குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்த் சாத்தான்குளம் சம்பவத்தில், ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பினருக்கு இருக்கும் தொடர்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் குறித்து விளக்கமளிக்க தமிழக உள்துறை செயளாலர் மற்றும் டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் என்று அழைக்கப்படும் காவல்துறை நண்பர்கள் குழு மாநிலம் முழுவதும் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மாநில அரசு ரத்து செய்துள்ளது. காவல்துறை தலைவரின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:-