காவல் உதவி ஆய்வாளருடன் மோதலில் ஈடுபட்ட முன்னாள் எம்பி – வைரலாகும் வீடியோ.!

Scroll Down To Discover
Spread the love

இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளருடன் மோதலில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், குறிப்பாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஊரடங்கு விதி கடுமையாக்கப்பட்டு உள்ளது. அங்கு வெளியில் செல்ல வேண்டும் என்றால், இ-பாஸ் கட்டயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.அர்ஜுனன் சுங்கச்சாவடி வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அதில் ஆவேசமடைந்த கே.அர்ஜுனன் காவலர்களை ஏகவசனத்தில் தரக்குறைவாக பேசினார். உதவி ஆய்வாளரும் அவரை ஒருமையில் திட்டினார்.
https://youtu.be/JuOTJTNhqtU
இதனால் சடாரென கோபப்பட்ட கே.அர்ஜுனன் அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளரை காரை விட்டு இறங்கி வந்து தாக்க முயன்றார். பதிலுக்கு காவல் உதவி ஆய்வாளர் கே.அர்ஜுனனை தள்ளிவிட்டார். பின்னர் ஆத்திரமடைந்த அவர் காவல் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளது.

கே.அர்ஜுனன் 80 – 84 தர்மபுரி திமுக எம்பியாக பதவி வகித்தார். பிறகு அதிமுகவில் சேர்ந்து சேலம் மாவட்டச் செயலாளர், வீரபாண்டி எம் எல் ஏ., உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அரசியல் செய்தவர் தற்போது தீபா அணியில் உள்ளார்.