விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பசு பாதுகாப்பு பிரிவு தலைவரை சுட்டு கொன்ற கும்பல் : வெளியான பதபதைக்கும் வீடியோ..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய பிரதேச விஷ்வ இந்து பரிஷத்தின் பசு பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவராக ரவி விஷ்வகர்மா இருந்தார். இவர் சனிக்கிழமை ஹோஷங்காபாத்தில் இருந்து நண்பர்கள் இருவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, போபாலில் இருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள பிபாரியா நகரில் 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்துள்ளது. முகத்தை துண்டால் சுற்றிக் கொண்டிருந்த அந்த கும்பல், ரவியின் காரை முதலில் தாக்குகின்றனர். பின்னர் துப்பாக்கியால் ரவியை ஒருவர் சுடுகிறார்.

அப்போது காரில் உடன் வந்த இருவர் தப்பி ஓடுகின்றனர்.நெஞ்சில் குண்டு பாய்ந்த ரவியை வெளியே இழுத்துப்போடும் அந்த கும்பல், இரும்பு தடியை கொண்டு சரமாரியாக அடித்து கொல்கின்றனர்.
https://twitter.com/IKaransharma27/status/1276866037376520194?s=20
இதனை அவ்வழியாக சரக்கு வாகனத்தில் செல்லும் நபர் ஒருவர் உயிரை பணயம் வைத்து செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. கொலையாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முன்பகை காரணமாக இக்கொலை நடந்ததாகவும், கொலை தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிந்து, தப்பியோடியவர்களை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

வி.ஹெச்.பியின் செயல்பாட்டாளர் கோபால் சோனி இது ஒரு திட்டமிட்ட கொலை என்று கூறினார். “விஸ்வகர்மா வி.எச்.பி.யின் பசு பாதுகாப்பு பிரிவின் மாவட்டத் தலைவராக பசுக்களின் பாதுகாப்பிற்காக பணியாற்றி வந்தார். அவரது கொலை குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்” என்று திரு சோனி கூறினார்.